அபிராமி அந்தாதி 45
தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.
உன்னைத் துதிக்காத......
பல்லவி
உன்னைத்துதிக்காத உன் பாதம் பணியாத
என்னைப் பொறுத்ருள்வாய் கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
தன்னைத் தானறிந்து தன் கடமை தான் செய்து
உன் பதங்கள் பணியாது உன்னை துதிக்காத
நன்னெறியாளர்கள் உளரோ இலரோ அறியேன்
இன்னணம் நான் செயினும் வெறுக்காமல் பொறுத்திடுவாய்
No comments:
Post a Comment