கருணைக்கடலே......
பல்லவி
கருணைக் கடலே அருணாச்சலேச்வரா
திருவண்ணாமலை தனிலெழுந்தருளிய
அனுபல்லவி
இருவினைப் பயன்களைக் களையும் நல்மருந்தே
வருந்தித் துதித்திடும் அன்பர்க்கு விருந்து
சிட்டைஸ்வரம்
நிஸ்ரிமாகரீ ஸ்நிதபஸா நிநிஸநிதபமா பநீநிஸா
ஸரிமகரிஸ ரிமபநி தபமப ஸ்ரிம்க்ரிஸ் ஸரிமகரிகரிஸ
சரணம்
திருமால் பிரமன் அமரேந்திரனும்
அரக்கரும் தேவரும் நந்தியும் கணங்களும்
மருகன் கணபதி உண்ணாமுலையுடன்
நேசன் கேசவனும் போற்றித் துதிக்கும்
இராகம் : நாராயணகௌளை தாளம் : ஆதி
No comments:
Post a Comment