நினைத்தாலும் போதும்.......
பல்லவி
நினைத்தாலும் போதும் மனத்திலவள் நாமம்
அனைத்து நலன்களும் தருவாள் சாமுண்டேச்வரி
அனுபல்லவி
வனப்புமிகு ஈசன் சதுரங்க வல்லப நாதன்
மனையாள் ஶ்ரீராஜராஜேச்வரியின் தோழியை
சரணம்
தனக்குவமையில்லா கேசவன் சோதரி
எனக்கருளவென்று பூவனூர் எழுந்தருளி
வினைப்பயனகள் போக்கி தனிக்கருணை பொழிந்தாள்
முனைப்புடனே அனுதினம் அவள் பாதம் பணிந்தேன்
இராகம் : திலங் தாளம் : க.சாபு
No comments:
Post a Comment