அபிராமி அந்தாதி 50
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.
நாமங்கள்.....
பல்லவி
நாமங்கள் பல உடைய கேசவன் சோதரியுன்
தாமரைச் சரணமே அரண் எமக்கு
அனுபல்லவி
பூமண்டலம் போற்றும் புகழ் மிகு அன்னையே
காமனும் நாணும் பேரழகுடையவளே
சரணம்
அயனரனரியின் சக்தியே சங்கரி
புயங்களிலைந்து மலரம்பேந்திய
மாதங்கி மாலினி சூலினி வாராகி
நாயகி நச்சரவணிந்த சியாமளி
No comments:
Post a Comment