அபிராமி அந்தாதி 81
அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.
தேவி.....
பல்லவி
தேவி கேசவன் சோதரி நீயே
காவலாயெனக்கிருந்து அருள் புரிந்தாயே
அனுபல்லவி
தேவ தேவியரை வணங்கேனவர்கள்
ஏவல் புரியுமுந்தன் பரிவாரங்களே
சரணம்
இணங்கேன் நெஞ்சில் வஞ்சமுடையோருடன்
பிணங்கேன் தனதனைத்தும் உனதென நினைத்து
வணங்கிடுமுந்தன் அடியாருடனே
அணங்கே அறிவிலியுன் கருணையை வியந்தேன்
No comments:
Post a Comment