அபிராமி அந்தாதி 41
புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
புண்ணியம்......
பல்லவி
புண்ணியம் செய்தேன் கேசவன் சோதரி
இம்மண்ணில் பிறந்து உன்னைத் தொழுவதற்கு
அனுபல்லவி
கண்ணில் நீர் சொரிய உன்னெதிரில் நின்று
பண்ணிசைத்து உனைப்போற்றி உன்னருளைப் பாடிட
சரணம்
கண்கள் புதுப்பூங்குவளை மலரென விளங்க
வண்ணம் சிவந்த மணாளனுடன் கூடி
எண்ணிலா அடியாருடன் எம்மைக் கூட்டியவர்
அம்புய பதம்தனை என் சென்னிமேல் பதித்திட
No comments:
Post a Comment