அபிராமி அந்தாதி 26
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.
பதினான்குலகிலும்.......
பல்லவி
பதினான்குலகிலும் முத்தொழில் புரிந்திடும்
அதிபதி மூவரும் வணங்கிடும் அன்னையே
அனுபல்லவி
அதி மணம் கமழ் கடம்ப மாலையணிந்தவளே
கதி நீயெனப் பணிந்தேன் கேசவன் சோதரி
சரணம்
துதித்தடியார் மலர் சொரியும் உனதிரு தாள்கள்
புதுமலரின் மணத்துடனே வாசம் வீசிட
எதுவும் அறியாத என் நாவாலுனைப் பாடி
அதை நீ ஏற்றதும் நகைப்பைத் தருவதுவே
No comments:
Post a Comment