அபிராமி அந்தாதி 38
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
பவளச் செவ்வாயும்....
பல்லவி
பவளச் செவ்வாயும் முத்து நகையும் கொண்ட
புவனம் போற்றும் கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
குவி முலையும் அதைத் தாங்குமிடையும் கொண்டு
சிவனின் தவத்தைக் கலைத்தவளே உனை
உவகையுடன் பணிந்து துதித்தாலும் போதும்
சுவர்க்கமாம் அமரருலகையே ஆளலாம்.
No comments:
Post a Comment