அபிராமி அந்தாதி 33
இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
அத்தன்
பல்லவி
அத்தன் சிவபெருமான் சித்தம் குளிரச்செய்யும்
உத்தமியே வாசமுடைக் குவிமுலைக் கோமளமே
அனுபல்லவி
நித்தமும் செய்த வினைப்பயனால் என்னை
காலனழைத்திடும் வேளையில் காப்பவளே
சரணம்
இத்தரையில் நான் படும் துன்பங்கள் எத்தனையோ
அத்தனையும் களைந்தருள உனதருளை வேண்டி
பக்தியுடன் அன்னையே என்றழைக்குமென்னையே
கேசவன் சோதரி காத்தருள்வாயே
No comments:
Post a Comment