அபிராமி அந்தாதி 12
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.
புண்ணியம்......
பல்லவி
புண்ணியம் நானென்ன செய்தேன் என் தாயே
எண்ணியே வியந்தேன் கேசவன் சோதரி
அனுபல்லவி
மண்ணிலென்றுமுன் அடியாருடன் கூடி
உன்னையே பகலிரவும் அனுதினமும் துதித்தேன்
சரணம்
நண்ணுவதுன் நயம்பட உரைப்பதுமன் நாமமே
எண்ணத்திலென்றுமுன் தாமரைத் திருவடியே
வண்ணமாய் வைத்து மலர் தூவிப் போற்றினேன்
விண்ணும் மண்ணும் உலகேழும் படைத்தவளே
No comments:
Post a Comment