அபிராமி அந்தாதி 5
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
நஞ்சை.......
பல்லவி
நஞ்சை அமுதாக்கி நெஞ்சில் இருத்திய
அஞ்சுகமே அபிராமி கேசவன் சோதரியே
அனுபல்லவி
வஞ்சிக் கொடியிடை தாங்கும் செப்பு முலையுடையாளே
நெஞ்சினுள் ஒளியாக மணியாக இருப்பவளே
சரணம்
படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய
முத்தொழிலும் செய்பவளே சுந்தரியே அந்தரியே
அமர்ந்திருக்கும் பங்கய மலரினும் மெல்லியவுன்
திருவடித் தாமரையை தலைமேல் கொண்டேன்.
No comments:
Post a Comment