உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
மும்மலம் கொண்ட.....
பல்லவி
மும்மலம் கொண்ட என் பிறவிப்பிணியுடைத்தாய்
அம்மையே அன்பளித்து எனையாண்டு கொண்டாய்
அனுபல்லவி
அம்புயப் பதம் தனை தலையில் வைத்தெனை
இன்புற உனையே பணிந்திடச் செய்தாய்
சரணம்
அருள் தந்து எந்தன் உள்ளத்திலுள்ள
இருளெனும் அழுக்கை நீங்கிடச் செய்த
திரிபுரசுந்தரி கேசவன் சோதரி உன்
பெருங்கருணையை என்னென்று சொல்வேன்
No comments:
Post a Comment