அபிராமி அந்தாதி 37
கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.
எண் திசை......
பல்லவி
எண் திசை அணிந்த திருவுடையானிடம் கொண்ட
பெண்ணங்கே பேரழகே கேசவன் சோதரியே
அனுபல்லவி
வெண் முத்து மாலைதனை கமலமலர் மேனியிலும்
கரங்களில் கரும்பு வில்லும் மலரம்புமுடையவளே
சரணம்
விடம் கொண்ட பாம்பின் படம் போல் விளங்கும்
அல்குலைக் கொண்ட இடைதனில் அணிவது
விதம் விதமாய் நவ மணிகள் கோர்த்த
அழகிய மேகலையும் பட்டாடைகளுமே
No comments:
Post a Comment