அபிராமி அந்தாதி 25
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.
மூவருக்கும்.....
பல்லவி
மூவருக்கும் அன்னையே கேசவன் சோதரி
மூவலகிற்கும் அபிரமி எனும் மருந்தே
சமஷ்டி சரணம்
தேவி உன்னடியார் பின்னே திரிந்து
பூவுலகில் பலவேறு தவங்கள் புரிந்தேன்
சாவும் பிறப்புமிலா வாழ்வு பெற முயன்றேன்
யாவும் உன்னருளலென இனியுமுனைத் துதித்தேன்
No comments:
Post a Comment