அபிராமி அந்தாதி 23
கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.
உன்னுருவல்லாது.....
பல்லவி
உன்னுருவல்லாது வேறொன்று நினையேன்
என் மனத்திலென்றும் கேசவன் சோதரி
அனுபல்லவி
உன்னடியார் கூட்டம் தனை ஒருபோதும் தள்ளேன்
இன்னொரு சமயம் என்றும் விரும்பேன்
சரணம்
மூவுலகிற்குள்ளேயும் வெளியேயுமிருப்பவளே
உள்ளத்தினுள்ளே ஊறுகின்ற கள்ளே
சொல்ல முடியாத ஆனந்தமளிப்பவளே
எளியேன் எனக்கருளும் எந்தன் கண்மணியே
No comments:
Post a Comment