அபிராமி அந்தாதி 8
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே
மகிடன் தலைமீது......
பல்லவி
மகிடன் தலை மீது அமர்ந்தவனை மாய்த்த
சுகபாணியே அழகே கேசவன் சோதரி
அனுபல்லவி
அகம் புறமிரண்டிலுமென் பாசத்தளை களையும்
சகம் புகழும் கன்னிகையே ஈசன் நாயகியே
சரணம்
வேதங்களேந்தும் பிரமனின் தலையேந்தும்
மாதே சுந்தரியே செந்நிற மேனியளே
பூதலம் போற்றும் நீலியே உந்தன்
பாதகமலமே என்றும் எந்தன் துணை
No comments:
Post a Comment