“ அபிராமி அந்தாதி 3”
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
அறியாத.....
பல்லவி
அறியாத மறை பொருளை உனதருளாலறிந்தேன்
புரிந்து கொண்டேனுன் திருவடியே சதமென்று
அனுபல்லவி
பிரிந்தேன் தன் கருமத்தால் நரகத்தில் வீழ்ந்துழலும்
சிறியாரை அவர்தம் உறவுகளை சேர்க்கையை
சரணம்
அருந்தவத்தினர் விரும்பித் துதித்திடும் திருவே
பெருமைக்குரிய மறைபொருளே மாதே
திருமால் கேசவன் சோதரி மாயே
திருவடி சரணடைந்தேன் நீயேயென் துணை.
No comments:
Post a Comment