அபிராமி அந்தாதி 7
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
பல்லவி
கமல மலரமர் பிரமனும் கேசவனும்
நிலவணிந்த பெருமானும் வணங்கிடும் சுந்தரியே
அனுபல்லவி
அமரரும் பணியும் உமையே நுதலில்
சிந்துரம் அணிந்த பேரழகே
சரணம்
கடைந்திடும் மத்தின் நடுவே சுழன்றிடும்
தயிரென என் ஆவி இங்குமங்குமிவ்வுலகில்
சுற்றித் திரியாமல் நற்கதி பெறவே
உன்னருள் வேண்டி உன் பதம் துதித்தேன்
No comments:
Post a Comment