அபிராமி அந்தாதி 16
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
அழகிய கிளியே.......
பல்லவி
அழகிய கிளியே கேசவன் சோதரியே
முழுமதியே மூவுலகின் அதிபதியே
அனுபல்லவி
விழலென ஒதுக்கிட முடியாத வெளியே
அழல் நீர் நிலம் காற்று ஆகாயமானவளே
சரணம்
நிழலென உனதிரு கழலடி பணிந்து
வழிபடுபவர் மனத்தில் சொலிக்கும் ஒளியே
மழலையென் மொழி கேட்டு தாயே நீயே
ஏழையென்னறிவில் நின்றது அதிசயமே
No comments:
Post a Comment