அபிராமி அந்தாதி 31
உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
அம்மையப்பனய்......
பல்லவி
அம்மையப்பனாய் ஓருருவில் காட்சி தந்து
எம்மை அன்பு செய்ய வைத்தவளே உமையே
சமஷ்டி சரணம்
இம்மையில் ஈன்றெடுக்க ஒருதாயுமில்லை
செம்மைப் படுத்திட மதங்களும் தேவையில்லை
மென்மையான தோளுடைய மகளிர் மேல் ஆசையில்லை
அம்புயமே பணிந்தேன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment