அபிராமி அந்தாதி 17
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
தாமரையும்.....
பல்லவி
தாமரையும் அழகிய மலர்களும் துதித்திடும்
கோமகளே மலர்க்கொடியே கேசவன் சோதரி
சமஷ்டி சரணம்
காமனின் ஜெயமனைத்தும் தோல்வியுறச்செய்து
கண்ணழலாலவனை எரித்த சிவபெருமானின்
வாம பாகம் தனிலிடம் கொண்ட நாயகியே
பூமண்டலம் போற்றும் அதிசய வடிவுடையவளே
No comments:
Post a Comment