துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.ண
திரிபுரசுந்தரி ......
பல்லவி
திரிபுரசுந்தரி அவளே என் துணை
பரிவுடன் எனக்கருளும் தாயும் தெய்வமுமாய்
அனுபல்லவி
அரிய மறைகளின் பொருளாய் விளக்கமுமாய்
கரியவளவளே காட்சி அளிக்கின்றாள்
சரணம்
கரும்பு வில்லும் மெல்லிய பாசாங்குசமும்
அரும்பு மலரம்பும் கரங்ககளிலேந்தி
விரும்புமடியார்கள் நலன்களை பேணும்
கருணைக் கடலவளைக் கண்டு துதித்தேன்.
No comments:
Post a Comment