அபிராமி அந்தாதி 35
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
மணந்தரும்......
பல்லவி
மணந்தரும் பிறைதனை சூடிய உன் திருவடி
குணந்தரத் தலைமீது வைத்ததென் புண்ணியமே
அனுபல்லவி
அணங்கே கேசவன் சோதரியே உன்னைப்
பணிந்திடும் விண்ணோர்க்கும் இது கிடைத்திடுமோ
சரணம்
வணங்கிடும் அடியார்கள் பணிந்திட வேண்டியே
கணமும் ஓயாமல் அலையடிக்கும் கடல் நடுவே
தணல் நிறக்கண்ணுடைய பாம்பணை மீது
துயிலுறும் அணங்கே தாயே வைஷ்ணவியே
No comments:
Post a Comment