அபிராமி அந்தாதி 24
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
மணியே மாணிக்கமே.....
பல்லவி
மணியே மாணிக்கமே மணி தரும் ஒளியே
அணியே அணியும் அணிக்கழகளிப்பவளே
அனுபல்லவி
பணியாத பேர்களுக்கு பிணியாயிருப்பவளே
தணியாத பக்தியுடன் துதிப்போர்க்கு அருமருந்தே
சரணம்
பணிந்திடும் அமரருக்குப் பெருவிருந்தே உனது
இணையடித் தாமரை மலர் பாதங்களை
பணிந்த பின் வேறு ஒருவரையும் பணிந்திடத்
துணியேன் தூயவளே கேசவன் சோதரி
No comments:
Post a Comment