அபிராமி அந்தாதி 36
பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
தாமரை போல்.......
பல்லவி
தாமரை போல் தனமுடைய கேசவன் சோதரி
மாமறைகள் சொல்லும் மாயையும் நீயே
சமஷ்டி சரணம்
பூமண்டலந்தனில் பொருளாக இருப்பவளே
பொருள் தரும் போகமே போகம் தரும் மாயையே
மாயையினால் வந்த மருளே மருள் தந்த தெருளே
அருள் தந்து எனையாண்ட பரவெளியே அம்பிகையே
No comments:
Post a Comment