அபிராமி அந்தாதி 32
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.
ஈசனொரு ......
பல்லவி
ஈசனொரு பாகத்தமர்ந்த பெண்மணியே
நேசமுடனெனையாண்ட பாசத்தை என் சொல்வேன்
அனுபல்லவி
மாசிலா அன்னையே கேசவன் சோதரி
காசினி போற்றும் தேசுடைய தேவியே
சரணம்
ஆசைக் கடலில் அகப்பட்டுக் கிடந்த என்னை
பாசக் கயிற்றை வீசியே கூற்றுவன்
நீசத் தனமாகப் பற்றிடும் வேளையிலுன்
வாசக்கமலபதம் தலைமீது வைத்தெனையே
No comments:
Post a Comment