தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
உனதடியே ......
உனதடியே பணிந்தேன் கணபதியே அருள்வாய்
அனுபல்லவி
அனவரதம் உன் மலர்ப் பதமே துதித்தேன்
வினையிடர் களந்தே எனக்கு துணைபுரிந்திடுவாய்
சரணம்
கொன்றையும் சண்பக மாலையும் சூடிய
தில்லை நாயகனும் உமையுமீன்ற
பிள்ளையே எப்போதும் என் சிந்தையுள்ளே
அன்னை அபிராமியை நிலைத்திடச்செய்வாய்.
No comments:
Post a Comment