அபிராமி அந்தாதி - 6
சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
சிரந்தனிலுன்.....
பல்லவி
சிரந்தனிலுன் தாமரைத் திருவடியே வைத்தேன்
வரமருள்வாயெனக் கேசவன் சோதரி
அனுபல்லவி
பரம ஆகமங்கள் சொல்லுமுன் வழிமுறையே
தரமுடன் தினமும் பாராயணம் செய்தேன்
சரணம்
நிரந்தரம் நெஞ்சினில் நிலைத்திருப்பது உன்
திருமந்திரமே செந்தூர நிறத்தவளே
அருந்தவம் புரிந்திடுமடியாருடன் கூடி
வருந்தித் துதிப்பதுந்தன் திருநாமம் மட்டுமே
No comments:
Post a Comment