அபிராமி அந்தாதி 39
ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!
ஆள உன் பங்கய......
பல்லவி
ஆள உன் பங்கய பதமுண்டு காலனிடம்
மீள உன் கடைக்கண் அருள் விழியுண்டு
அனுபல்லவி
தாளினைப் பணியாது,கேசவன் சோதரியே,
வாளாவிருப்பதென் குறையே உன் குறையன்று
சரணம்
தோளிலேந்திய வில்லினை எடுத்து
மாளச் செய்திட அம்பினைத் தொடுத்து
திரிபுரமெரிசெய்த சிவனிடம் கொண்ட
ஒளி மிகு நுதலுடைய திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment