நாராயண........
பல்லவி
நாராயண கோவிந்த கேசவா என
ஓராயிரம் நாமங்கள் உடையவனே
அனுபல்லவி
ஆராவமுதனே ஆதிமூலமே
தீராவினைகளைத் தீர்ப்பவனே
சரணம்
ஶ்ரீராமா என்ற ஒரு நாமத்திற்கிணையாக
வேறெந்த நாமமும் பாரினில் இல்லை
மாறாத பக்தியுடன் அவன் தாள் பணிந்து
ஶ்ரீராமா என்றே தினம் துதிப்போம்
No comments:
Post a Comment