உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே
அன்னை அபிராமிய.....
பல்லவி
அன்னை அபிராமியே என்றும் எந்தன் துணை
பன்னக சயனன் கேசவன் சோதரி
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளாய் மூவருக்கும் மூத்தவளாய்
இன்னமுது படைக்கும் அன்னபூரணியாய் விளங்கும்
சரணம்
கதிரவனின் காந்தியும் செம்மலர் போல் திலகமும்
பதுமை போல் வீற்றிருக்கும் திருமகளும் நேசிக்கும்
அதி மணம் கமழ் குங்கும நிற மேனியும்
கொடியிடையும் அழகுக் குறுநகையும் கொண்ட
No comments:
Post a Comment