அங்கயற்கண்ணி .......
பல்லவி
அங்கயற்கண்ணி சங்கரி உந்தன்
பங்கய பதம்தனை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரில்
மங்களமாய்க் குடிகொண்ட சிவகாமேச்வரி
சரணம்
பொங்கரமணிந்த சங்கரன் துணைவி
சங்கு சக்ரதாரி கேசவன் சோதரி
எங்கும் நிறைந்திருக்கும் அகிலாண்டாச்வரி
எங்களைக் காத்தருள்வாய் தாயே பராசக்தி
இராகம் : ஹம்ஸதீபகம் தாளம் : ஆதி
No comments:
Post a Comment