அபிராமி அந்தாதி 22
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
மணம் தரும்.....
பல்லவி
மணம் தரும் மலரான வேதப் பொருளே
அணங்கே கொடியே இளஞ்சிக் கொம்பே
அனுபல்லவி
வணங்கிடும் பிரமனையும் தேவரையும் படைத்தவளே
குணமிலா எனக்கருளிய கேசவன் சோதரி
சரணம்
பனியுருகும் இமயம் தனில் உலவிடும் பிடியே
வினைப் பயனால் புவியில் பிறந்த என்னை
இனியும் இறந்த பின் பிறவாதிருக்க
கனிவுடன் ஆண்டருள உனையே வேண்டினேன்
No comments:
Post a Comment