வரம் தரும்....
பல்லவி
வரம் தரும் திரு முட்டம் வராக மூர்த்தியேயுன்
அரவிந்த பதம்தனை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
அரக்கன் இரணயாட்சகனை வதம் செய்து
நரர்சுரர் நலம் பெற பூவுலகை மீட்ட
சரணம்
அரனயன் நாரதர் அமரேந்திரனும்
சுரமுனி பிருஹஸ்பதி சுகசனகாதியரும்
கருணை மிகு அம்புஜவல்லியும் கருடனும்
கரம் பணிந்தேத்தும் பரம் பொருளே கேசவனே
இராகம் : கோகிலத்வனி (28ல் ஜன்யம்) ஆதி.
No comments:
Post a Comment