அபிராமி அந்தாதி 11
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
நிலம் நீர்....
பல்லவி
நிலம் நீர் காற்று நீள் விசும்பு நெருப்பென்றென்
ஆனந்தம் அறிவான கேசவன் சோதரி
அனுபல்லவி
உலகோர் போற்றும் மறை நான்கினுக்கும்
தொடக்கமும் முடிவுமாய் விளங்கிடும் அன்னையே
சரணம்
தலங்களுள் சிறந்த திருவெண்காட்டில்
நலம் பல நல்கிட திருநடம் புரியும்
கலைகளின் நாயகன் ஈசன் சிவபெருமான்
தலைமாலையாய் விளங்கும் உன் பாதம் பணிந்தேன்
No comments:
Post a Comment