அபிராமி அந்தாதி 29
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
சித்தியும்......
பல்லவி
சித்தியும் சித்தி தரும் பராசக்தியே
சக்தியே சக்தி தரும் சிவமும் நீயே
அனுபல்லவி
சித்தத்தில் எழுந்தருளி எனைக்காப்பவளே
அத்தனையுமானவளே கேசவன் சோதரியே
சரணம்
முத்தியும் முத்திக்கு வித்தும் நீயே
புத்தியே புத்தி தருபவளே தாயே
புத்திக்குள் விளங்கும் திரிபுரசுந்தரியே
நித்தமும் பணிந்தேனுன் பங்கய மலர்ப்பதமே
No comments:
Post a Comment