அபிராமி அந்தாதி #4
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
நரர்சுரர்........
பல்லவி
நரர்சுரர் முனிவர்கள் சிரம் பணிந்து வணங்கிடும்
அரவிந்த பதம் படைத்த கேசவன் சோதரி
அனுபல்லவி
பரம்பொருள் நீயே பரமேச்வரியே
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளே
சரணம்
சிரம் தனில் கங்கையும் திங்களும் கொன்றையும்
அரவணியுமணிந்த சங்கரரும் நீயும்
வரம் தந்து கருணையுடன் என் மனத்தில் என்றும்
அரசாட்சி செய்து ஆண்டருள வேண்டும்.
No comments:
Post a Comment