அபிராமி அந்தாதி 10
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.
இமவான் மகளே.....
பல்லவி
இமவான் மகளே கேசவன் சோதரி
உமையே முக்தி தரும் ஆனந்தமே
அனுபல்லவி
சமமென ஒருவரும் இல்லாதவளே
எழுதா மறையின் பொருளே அருளே
சரணம்
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
அன்றும் இன்றும் என்றும் வணங்குவது
உன்றன் அழகிய அரவிந்த மலர்ப் பாதமே
கன்று பசுவை அழைப்பது போலழைத்தேன்
No comments:
Post a Comment