அபிராமி அந்தாதி 30
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
தடுத்தெனை.......
பல்லவி
தடுத்தெனையாண்டு கொண்ட தயாபரியே
அடுத்து வந்த என் கை நன்றே உனக்கு
அனுபல்லவி
வடிவானவளே ஒன்றே பல உருவே
கடுவெளியே ஓருருவும் இல்லாதவளே
சரணம்
நடுக்கடலெனும் பிறவிப் பெருங்கடலுள் வீழ்ந்தாலும்
இடுக்கண் களைந்தெனை கரைசேர்ப்பது நீயே
நெடுமால் கேசவன் சோதரியே உமையவளே
எடுத்த பிறவி இனி தொடராத வண்ணம்
No comments:
Post a Comment