அபிராமி அந்தாதி 19
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
மாதொருபாகனாய்........
பல்லவி
மாதொருபாகனாய்த் திருமணகோலத்தில்
வெளி நின்று காட்சி தந்த கேசவன் சோதரி
அனுபல்லவி
யாதொரு குறையுமின்றி அளவிலா ஆனந்தம்
தீதற அளித்தனையே களிப்புறச் செய்தனை
சரணம்
பாதிமதியணிந்தவளே பக்தருக்கருள்பவளே
மேதினி போற்றும் வண்ணம் ஒன்பது கோணங்களில்
சோதியாய்ச் சுடராய் நின்று காட்சி தரும்
ஆதியே அந்தமே உன்னருளை என்னென்பேன்
No comments:
Post a Comment