பதமொன்றே.......
பல்லவி
பதமொன்றே சதமென்றும்
பூவராக ஸ்வாமி உன்றன்
அனுபல்லவி
சுதர்சனமும் சங்கும் கையிலேந்தும் சுந்தரனே
முதலும் முடிவுமிலா மூலாதார மூர்த்தியுன்
சரணம்
மதம் கொண்ட அரக்கன் இரண்யாட்சகனை
வதம் செய்து வென்று பூவுலகைக் காத்தவனே
இதம் தரும் கருணைக் கடலன்னை உன் மார்பில்
நிதமிருந்து துதித்திட கேசவனே எனக்குன்
இராகம் : பூர்ணசந்திரிகா தாளம்: ஆதி (அ) க.சாபு
No comments:
Post a Comment