அபிராமி அந்தாதி 40
வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.
ஒளி தரும்
பல்லவி
ஒளி தரும் நெற்றிக் கண்ணுடையாளை
வானவர் வணங்கிட விரும்பு மெம் தலைவியை
அனுபல்லவி
எளிதில் பேதை நெஞ்சில் காண இயலாத
நளினமான கன்னியை திரிபுரசுந்தரியை
சரணம்
பளிங்கு மேனியளை கேசவன் சோதரியை
எளியோர்க்கருளும் கருணைக் கடலை
களிப்புடன் நானும் கண்டு வணங்கியே
விளித்திட விரும்பியது முன் செய்த புண்ணியமே
No comments:
Post a Comment