அபிராமி அந்தாதி 18
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.
காலன் வரும்போது.....
பல்லவி
காலன் வரும் போது எனைக் காக்க வேண்டும்
ஞாலம் போற்றும் கேசவன் சோதரி
அனுபல்லவி
சீலமிலாயென் மன அழுக்கையகற்றி
சாலச் சிறந்த உன் பொற்பாதம் காண்பித்து
சரணம்
ஆலமுண்ட நீலகண்டன் சிவபெருமானிடமே
ஏலவார்குழலி நீ இடம் கோரி நின்றவளே
மேலுமென் சிந்தையுள் வந்தமர்ந்துன்
கோலமிகு மணக்கோலம் காண்பித்து நீயே
No comments:
Post a Comment