அன்னபூரணி....
பல்லவி
அன்னபூரணி விசாலாட்சி
உன்னருள் வேண்டியே உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
பொன்னும் பொருளும் மின்னும் பட்டும்
இன்னிசையும் நிறைந்திடும் காசி மாநகரில்
சரணம்
மனிதகுலமனைத்தும் புனிதமடைந்திடவே
இனிதாகப் பாயந்திடும் கங்கை நதிக்கரையில்
முனிவரும் தேவரும் மூவரும் வணங்கிட
கனிவுடன் குடி கொண்ட கேசவன் சோதரி
இராகம் : ரக்திமாரகிணி தாளம் : ஆதி
No comments:
Post a Comment