அபிராமி அந்தாதி 13
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?
உன்னையன்றி....
பல்லவி
உன்னையன்றி வேறோர் தெய்வம் நான் வணங்கேன்
அன்னையே முகுந்தன் கேசவன் சோதரியே
அனுபல்லவி
முன்னம் உலகம் பதினான்கும் படைத்தவளே
படைத்தவண்ணம் காத்தவளே தன்னுள்ளே மறைத்தவளே
சரணம்
தன்னெஞ்சில் நஞ்சினைக் கறையாக வைத்திருக்கும்
பன்னகாபரணன் நமச்சிவாயனுக்கும்
முன்னே உதித்தவளே மாதவம் புரிபவளே
உன்னருளொன்றே என்றும் வேண்டினேன்
No comments:
Post a Comment