அபிராமி அந்தாதி 14
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே
தேவரும் அசுரரும் ......
பல்லவி
தேவரும் அசுரரும் தினம் பணிந்தேத்தும்
தேவியே ஈச்வரியே கேசவன் சோதரியே
அனுபல்லவி
மூவரில் நான்முகனும் நாராயணனும்
ஆவலுடன் உனையே நினைந்து துதிப்பவர்
சரணம்
தேவ தேவன் சிவபெருமானோ
பாவையுனை மனத்துள் போற்றிக் காப்பவர்
யாவுமிருந்தும் வியப்பிற்குரியது
பூவுலகில் எளிதாயுன் அடியார்க்கருள்வது.
No comments:
Post a Comment