சரச்வதி
தமிழகத்தில் கூத்தனூரில் சரஸ்வதிக்கென்று தனிக்கோவில் உள்ளது. இங்கு சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இவளை ஞானசரஸ்வதி என்பர்.
திருச்சிக்கு அருகிலுள்ள உத்தமர் கோவிலில் பிரம்மன் சந்நிதிக்குப் பக்கத்தில் தனிச்சந்நிதியில் சரஸ்வதி அருள்புரிகிறாள். தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூர் திருத்தலத்தில் ஒரே சந்நிதியில் பிரம்மனும் சரஸ்வதியும் காட்சி தருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் வியாசரின் சாபத்தால் நதி ரூபமாகவும், தெய்வ ரூபமாகவும் மாறிய சரஸ்வதிக்கு காஷ்மீரில் ஆதிசங்கர பகவத்பாதர் கட்டிய கோவிலின் அருகில், வேதவியாசர் சரஸ்வதிக்கு ஒரு சிறிய கோவில் கட்டியிருக்கிறார். மேலும், ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம், பாஸர் என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும் வேத வியாசர் கட்டியதாக வரலாறு கூறுகிறது. வியாசர் சரஸ்வதியை வழிபட்டு பேறு பெற்றிருக்கிறார்.
ஸ்ரீபிரம்மாவின் மனதிலிருந்து சரஸ்வதி அவதரித்ததாகவும் புராணத்தகவல் உண்டு. அந்த நாள் தை மாதத்தில் வரும் "வசந்த பஞ்சமி'யாகும். இதனை மகாபஞ்சமி என்றும் சொல்வர்.
பகவான் கிருஷ்ணர் முதன்முதலில் சரஸ்வதியை பூஜித்துப் பேறுபெற்ற நாள் வசந்த பஞ்சமி என்று புராணம் கூறுகிறது. அதன்விளைவாக ராஜதந்திரத்திலும் அறிவாற்றலிலும் சிறந்து விளங்கினார்.
தனது வித்தைகளை மீண்டும் நினைவுக்கு வர வரம்பெற்றார்.
மகாகவி காளிதாசருக்கும், ராமாயணம் இயற்றிய கம்பருக்கும், குமரகுருபரருக்கும் ஸ்ரீசரஸ்வதி தேவி பல வழிகளில் துணை நின்று உதவியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன.
சரஸ்வதி தேவி பூவுலகில் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்ற தலங்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமானதாக திருக்காளத்தி விளங்குகிறது.
சீர்காழி, திருமறைக்காடு, திருக்கருகாவூர், திருநெய்தானம், இராமேஸ்வரம், கண்டியூர் போன்றவையும் சரஸ்வதி வழிபட்ட தலங்களாகும்.
வேதங்களில் இன்னொரு சரஸ்வதியும் உண்டு. அவள் வேதசரஸ்வதி ஆவாள். ஜடாமகுடம் தரித்து, அபயமுத்திரையோடு பத்மாசனத்தில் காட்சி தரும் இந்த வேதசரஸ்வதி நதி ரூபமானவள். நீர்ப்பறவையை வாகனமாகக் கொண்டவள்.
கல்வி, கலை, ஞானம், வேதம் இவற்றின் தலைவியான ஸ்ரீசரஸ்வதி ஒருவருக்கு ஒருமுறை அருள்புரிந்தால், அது நிரந்தர மாக அவர்களைவிட்டு என்றும் பிரியாமல் நிலைத்திருக்கும். ஸ்ரீசரஸ்வதியை தியானித் தால் அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கலாம்.
No comments:
Post a Comment