அபிராமி அந்தாதி 28
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
சொல்லோடிணைந்து......
பல்லவி
சொல்லோடிணைந்து இயங்கும் பொருள் போலவே
நல்ல வண்ணம் நாதனுடன் இணைந்தாடும் பூங்கொடியே
அனுபல்லவி
அல்லல் களைந்தருளும் அபிராமி அன்னையே
நல்லன எல்லாம் தரும் கேசவன் சோதரி
அனுபல்லவி
அல்லும் பகலுமுன் புது மலர்ப் பாதங்களை
நல்ல வண்ணம் போற்றி நாளும் துதித்திடும்
நல்லடியார் தமக்கே அரசு போகமும்
எல்லா நன்மையும் சிவபதமும் கிடைக்குமே
No comments:
Post a Comment