அபிராமி அந்தாதி 21
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.
சங்கு வளையணிந்த....
பல்லவி
சங்கு வளையணிந்த செங்கையுடையாளே
செங்கல சம்முலையாளே கேசவன் சோதரியே
அனுபல்லவி
பொங்கும் நுரையுடைய கங்கையைத் தாங்கும்
சங்கரனார் பங்கிலுறை மாதவமே மலைமகளே
சரணம்
எங்கும் நிறைந்திருக்கும் பல வண்ண பேரழகே
திங்கள் நிறத்தாளே பொங்கரவுக்குடையாளே
பங்கயம் போல் சிவந்தவளே பால்வண்ண வடிவழகே
தங்கத் திருவுருவே பசும் பெண் கொடியே.
No comments:
Post a Comment