அபிராமி அந்தாதி 15
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
பசுங்கிளியே.....
பல்லவி
பசுங்கிளியே ஈசன் இடமமர்ந்தவளே
இசைதரும் இன்சொல் தரும் கேசவன் சோதரியே
சமஷ்டி சரணம்
திசை தொறும் உந்தன் திருவருள் பெறவே
விசையுடன் செயல்படும் உனதடியார்கள்
இசைவுடன் மண்ணளிக்கும் செல்வம் மட்டுமன்றி
இந்திர பதவியும் முக்தியும் பெறுவார்.
No comments:
Post a Comment